அதிசய சக்கரங்கள் !
சக்கரங்கள்
------------------------
ஆக்கம்: சுதாகர் பாண்டியன்
மனித உடல் கண்களுக்கு புலனாகும் ஸ்தூல சரீரம் மற்றும் புலனாகாத சூக்கும சரீரமும் கொண்டது. சக்கரங்கள் என்பவை மனித உடலின் சூக்கும சரீரத்தில் அமைந்த சக்தி மையங்களாகும். இவை மொத்தம் ஏழு, அவை மூலாதாரம், சுவாதிஷ்டானம், ம்ணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சகஸ்ரதளம் என்பவை ஆகும். இது முதுகெலும்புத்தண்டின் கீழிருந்து மேல் நோக்கி நெடுகிலும் வரிசையாக அமைந்துள்ளது. இந்த சக்கரங்கள் உண்மையில் ஸ்தூல உடலில் கிடையாது, ஆனால் சூக்கும உடலில் உண்டு.
மனிதனின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் இந்த சக்கரங்கள் கட்டுப்படுத்துகின்றன. இது ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான தன்மைகளையும், உணர்வுகளையும் மனதுக்கும்,உடலுக்கும் அளிக்கக்கூடியவையாகும்.
இந்த அதிசய சக்கரங்களைப் பற்றி பார்ப்போம்,
ஒவ்வொரு சக்கரமும் தாமரை வடிவினைக்கொண்டவை, சாதாரணமாக மலராத நிலையில் உள்ளன, யோகப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியானது இதில் பாயும் போது இவை மலர்கின்றன.
ஒவ்வொரு சக்கரத்திற்கும் பல இதழ்கள் உண்டு. இந்த இதழ்களின் எண்ணிக்கை ஆரம்ப நிலையிலிருந்து, அதாவது மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மோல்நோக்கி அதிகரிக்கும். ஒவ்வொரு சக்கரங்கத்திற்க்கும் ஒரு ஆண் தெய்வம், மந்திரம், நிறம் ஆகியவை உண்டு. மேலும் சக்கரத்திலுள்ள தாமரையின் ஒவ்வொரு இதழுக்கும் ஒரு மந்திர எழுத்து இருக்கிறது. பஞ்ச பூதங்களான நிலம்,நீர்,காற்று,நெருப்பு மற்றும் ஆகாயம் இவற்றுடன் ஒவவொறு சக்கரமும் தொடர்பு கொண்டுள்ளது.
இவ்வாறு ஆண் தன்மையுடைய இச்சக்கரத்தில் பெண் வடிவாகிய குண்டலினி சக்தியானது பாயும்போது அதன் பெயர் சக்கரத்திற்கு ஏற்றார்போல் மாறுபடுகின்றது.அதுவே ஒவ்வொரு சக்கரத்தின் பெண் தெய்வமாகும். ஆண் வடிவாகிய சக்கரத்தில் பெண் வடிவாகிய குண்டலினி சக்தியானது சேர்ந்து உடலுக்கும், மனதுக்கும் புதிய சக்திகளையும், மாற்றங்களையும் தருகின்றன. இதுவே யோகத்தினால் கிடைக்கும் பயன் ஆகும்.
சூக்கும உடலில் காணப்படும் இந்த சக்கரத்தின் இருப்பிடங்களை ஸ்தூல உடலுடன் தொடர்பு படுத்தி தெரிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அப்போதுதான் மிகச்சரியாக குண்டலினி யோக தியானத்தினை பிழையின்றி செய்யமுடியும்.
ஆண்களுக்கு மூத்திரத்துவாரத்துக்கும் மலத்துவாரத்துக்கும் உள்ள இடைவெளியிலும், பெண்களுக்கு பெண்குறியின் உட்புறம் கருப்பைவாசல் அருகிலும் மூலாதாரச்சக்கரமானது அமைந்துள்ளது.
மூலாதாரச்சக்கரத்திற்கு சற்று ஏற்புறமாக,சுமார் நான்கு விரல் மேலே சுவாதிஷ்டானம் உள்ளது.
மூன்றாவது சக்கரமான ம்ணிபூரகம் நாபியின் பின்னே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.
இதன் பின்னால் இதயத்துக்கு நேர் பின்புறம் முதுகுத்தண்டில் அநாகத சக்கரமானது அமைந்துள்ளது.
விசுக்தி சக்கரம் மைய கழுத்துக்குப் பின்னால் அதே முதுகுத்தண்டில் அமைந்துள்ளது.
ஆக்ஞை சக்கரம் முதுகுத்தண்டின் உச்சியில், இரு புருவங்களுக்கும் இடையே நேர் பின்புறம் அமந்துள்ளது.
கடைசியில் சகஸ்ரதளமானது தலையின் மேற்புறம் கவிழ்ந்த நிலையில் ஆயிரம் இதழ்களுடன் காணப்படுகிறது.
மேலும் மூலாதாரமானது நிலத்துடனும், சுவாதிஷ்டானம் நீருடனும், மணிபூரகம் காற்றுடனும், அநாகதம் நெருப்புடனும், விசுக்தி ஆகாயத்துடனும் தொடர்பு கொண்டுள்ளன.
அற்புதமான வர்மக்கலை!
ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது..அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான " அகத்தியர் " . இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இதற்கு சாட்சி !." அகத்தியர் " கற்பித்த சில வர்மக்கலைகளில் "அகஸ்தியர் வர்ம திறவுகோல்","அகஸ்தியர் வர்ம கண்டி ", "அகஸ்தியர் ஊசி முறை வர்மம் ","அகஸ்தியர் வசி வர்மம்", "வர்ம ஒடிவு முறிவு ","அகஸ்தியர் வர்ம கண்ணாடி ","வர்ம வரிசை","அகஸ்தியர் மெய் தீண்டாகலை" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. "ஜடாவர்மன் பாண்டியன் " என்ற மன்னன் தான் இதில் வல்லவனாக திகழ்ந்தான்.பின்னர் பாண்டிய இனம் அழியத்தொடங்கியதும், இந்த கலையும் அழியத் தொடங்கியது. இதற்கு பின்னர் வந்த " சோழர்கள் " இதனை கற்றனர். பின்னர் இந்த கலை "இலங்கை", "சீனா" போன்ற நாடுகளில் பரவத் தொடங்கியது.காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி " புத்த" மதத்தை பரப்ப " சீனா " செல்லும் போது இந்த கலையும் அங்கு பரவியது.“Tenjiku Naranokaku" என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது."ஹு ஷிஹ் " என்ற அமெரிகாவிர்க்கான சீன தூதர் ஒருமுறை கூறும் போது " இந்திய ஒரு சிப்பாயை கூட சீனாவுக்கு அனுப்பாமல் 20 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டுள்ளது என கூறி உள்ளார். "1793 " ல் வெள்ளையர்கள் இந்தியா மீது படை எடுக்கும் போது.தாங்கள் இத கலை மூலமாக பாதிக்கப் படக்கூடாது என்பதற்காக தமிழக இளைஞ்சர்கள் இந்த கலை பயில்வதை தடை செய்தனர்.அன்று ஆரம்பமான அழிவு , இந்தியா சுதந்திரம் அடைந்தும் தொடர்கிறது !.இந்த கலையானது அனைவருக்கும் கற்று தர மாட்டாது. இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்க வழக்கங்களை கண்காணித்த பிறகே கற்றுத் தருவார்!!.இந்த கலையின் மூலம் ஒருவர் தாக்கப்பட்டால் இதற்கென்று தனியான சிகிச்சை முறை கையாள வேண்டும் என " "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே " என்ற வரிகள் தெரியப்படுத்துகின்றன.இதை எந்த வயதினரும் கற்கலாம்! ஆனால் யார் மட்டுமே கற்க முடியும் ? " "கர்ம வினைகள் அவமிருந்து வந்து கூடி விட்ட குறை தொட்ட குறை என விழம்பலச்சே "என்ற வரிகள் தெளிவு படுத்துகின்றது .வர்மக் கலைகளின் வகைகள் " "தொடு வர்மம்", " படு வர்மம்","தட்டு வர்மம் ","நோக்கு வர்மம் " என வகை படுத்தப்பட்டுள்ளது தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பாதிப்பை உணர மாட்டார் .இதை உணர்வதுக்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும்.இந்த பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ,ஒரு நாளிலோ, ஒரு மாததிலோ,அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும் !. படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும் !.தட்டு வர்மம் யாருக்கும் கற்று தரப்படமாட்டாது.இது மிகவும் மோசமான பிரிவு .ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும் .நோக்குவர்மம் தான் அனைத்திலும் உச்சமானது யாரையும் தொடமால் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும் ! உதாரனத்திற்க்கு சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் உள்ளவரை தாக்கலாம் ! அதே போல் சென்னையில் இருந்தே மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம் !!!.ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரை தாக்கும் வல்லமை கொண்டது இந்த கலை, ஆனால் இது யாருக்கும் கற்று தர படமாட்டாது. ஆசான் தன மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் வேண்டுமானால் இதை கற்கலாம் " தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு ஜென்மத்தில் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் " என்று தான் எனக்கு தோன்றுகிறது. " இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது, ஒவ்வொரு தமிழனின் கடமை. இனியாவது விழித்துக்கொள்வோம் !!!.
நன்றி : தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் - Tamil History and Culture
ஆங்கிலம் தெரியாததற்காக நான் வெட்கப்படவில்லை.
1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றபோது இந்திய அணியின் தலைவராயிருந்த கபில் தேவ்வை கோப்பையை வழங்கும் மேடைக்கு அழைத்தார்கள்.
இந்திய அணியினரின் வெற்றி குறித்து அவரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டார் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கியவர்.
கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில் கேட்கப்பட்டமையால்
கபில்தேவால் சரியாக பதில் சொல்லவியலவில்லை.
திக்கித்தடுமாறி பேசினார்.
அடுத்தநாள்,
இவருடைய குறைவான ஆங்கிலமொழிப்புலமையை அங்குள்ள நாளேடுகள் கிண்டலடித்து எழுதியிருந்தன.
இந்த செய்தி கபிலின் காதுகளுக்குப்போனது.
சிலநாட்களுக்குப்பின்னர்
வெற்றிக்கோப்பையுடன் தாயகத்திற்குத்திரும்ப
விமானநிலையம் வந்த அவரை
தங்களது காழ்ப்புணர்ச்சியை காட்டுவதற்காக அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள்
மீண்டும் பிடித்துக்கொண்டு,
உங்களது ஆங்கிலம் ஏன் படுமோசமாயுள்ளதென்று கேட்டார்கள்.
அதற்கு கபில்தேவின் பதில்:
பாருங்கள்..
நாங்கள் இங்கே ஆங்கிலம் பேசுவதற்காக வரவில்லை.
கிரிக்கெட் விளையாட வந்தோம்.
இதோ கோப்பையுடன் செல்கிறோம்.
ஆங்கிலம் தெரியாததற்காக நான் வெட்கப்படவில்லை.
உங்களது நாட்டின் தேசிய விளையாட்டான
கிரிக்கெட்டின் உலகக்கோப்பையை
நாங்கள் எடுத்துச்செல்கிறோம்.
இதற்காக நீங்கள்தான் வெட்கப்படவேண்டும்.
எப்புடி...?
இதுல என்ன கொடுமைனா,
இங்கிலாந்து இதுவரைக்கும் ஒருமுறைகூட
"ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை" வெல்லவில்லை.
via ஃபீனிக்ஸ் பாலா
சூரிய ஒளியால் இயங்கும் பைக்கை உருவாக்கிய மதுரை மாணவன் கார்த்திக்
“பெட்ரோலும் வேண்டாம்; மின்சாரமும் வேண்டாம்; சூரியன் மட்டும் போதும். உங்கள் வாகனம் ஓடும்” என்று நம்பிக்கை தருகிறார் இவர். படிப்பது தொழில் மேலாண்மை என்றாலும், இயந்திரவியலின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக சோலார் பைக்கைத் தயாரித்திருக்கிறார் இவர்.
“இயந்திரவியல் துறையில் படிக்கும் என் நண்பர் ஹரியுடன் இணைந்து இந்த பைக்கை உருவாக்கியிருக்கிறேன். முதல் கட்டமாக, சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றக் கூடிய சோலார் பேனல்களில் சிறிது மாற்றங்களைச் செய்து வைத்துக் கொண்டேன். சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றுவதற்காக தனி எலெக்ட்ரிக் டிரைவ் வீல் மற்றும் மோட்டார்களையும் வடிவமைத்தோம். ஹெட்லைட், இண்டிகேட்டர் போன்றவற்றிக்கு சைக்கிளில் பயன்படுத்தும் டைனமோவையே பயன்படுத்தினோம். பைக்கின் பாகங்களையும், சோலார் பாகங்களையும் இணைத்து முழுமையாக வண்டி தயாரானபோது சாலையில் ஓடத் தகுதியான நிலையில் இருந்தது. வண்டியை எங்கள் கல்லூரியில் டெமோ செய்து காண்பித்த போது பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகு மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயம் முன்பாக ஓட்டிக் காண்பித் தோம். எங்களைப் பாராட்டி வாழ்த்துக்கள் சொன்னார்” என்று ஆர்வத்துடன் விவரிக்கிறார் கார்த்திக்.
“அலுவலகம் செல்பவர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தங்கள் இரு சக்கர வாகனத்தை வெயிலில் பார்க்கிங் செய்து விட்டால் போதும். அதன்பிறகு, குறைந்தபட்சம் 35 கிலோ மீட்டர் முதல் அதிகபட்சமாக 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். இந்த வண்டியை
உருவாக்க ரூ.60 ஆயிரம் செலவாயிற்று. ஆனால், தொழில் முறையில் உருவாக்கும்போது ரூ.25 ஆயிரம் செலவில் தயாரித்துவிடலாம். சோலார் பைக்கை வாங்குவது தவிர எரிபொருளுக்கென வேறு பணம் செலவழிக்கத் தேவை யில்லை என்பது இதன் சிறப்பம்சம்” என்று கூறு ம் கார்த்திக் இந்த பைக்கினை உருவாக்க உதவிய நண்பர் ஹரி, மெக் கானிக் முத்து ஆகியோருக்கு நன்றி கூறுகிறார்.
அடுத்தகட்டமாக, முற்றிலும் சோலார் மூலம் இயக்கும் வகையிலான ஆட்டோ மற்றும் கார்களை வடிவமைக்கத் திட்டமிட்டிருக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி.
அதற்காக ஸ்பான்சர்’ கிடைத்தால் நிச்சயம் சாதிப்போம் என்றனர். இவர்களை 72001 41686, 91506 10003 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா?
பொதுவாக நம் அன்றாட வாழ்வில் பல ரூபாய்களை உபயோகப்படுத்துகின்றோம் ஆனால் அவற்றின் சிறபம்சங்கள் பற்றி தெறிந்து கொள்வதே இல்லை இதனால்தான் பல கள்ள நோட்டுகளை நாம் எளிதில் அடையாளம் காண இயலமுடியவில்லை,ஆனால் 1990 பிறகு நமது இந்திய
ரூபாய் நோட்டுகளில் பல மாற்றங்கள் ொண்டுவரப்பட்டது இது அடிக்கடி
மாற்றப்படும் இதனை வரயறை மற்றும் வடிவமைப்பது ரிசர்பேன் ஆஃப் இந்தியா. இப்படி வந்த ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்களை பற்றி தெறிந்து கொண்டால் ,எளிதாக கள்ள நோட்டுகளை அடையாளம் காணலாம். (பின்வரும் படத்தில் உள்ள எண்ணைக்குறிக்கும்)
1)ஒவ்வொரு ரூபாயிலும் உள்ள "ரைஸெட் இமேஜ்" எனப்படும் குறிப்பாக 1000 ரூபாயில் "டயமன்ட்" இமேஜ் 500 ரூபாயில் "வட்டவடிவிலும்" 100 ரூபாயில் "முக்கோண வடிவிலும்" 50 ரூபாயில்சதுர வடிவிலும்" இருக்கும் இதனை தொட்டுபார்த்தால் அதன் வடிவத்தை நாம் உண்ரமுடியும்.
2)ரூபாயின் கம்பி இலைகள் 1990 பிறகு வந்த நோட்டுகளில் இந்த கம்பி இலைகள் விட்டுவிட்டு இருக்கும் ஆனால் அதனை தூக்கிபார்த்தால் ஒரு நேர்கோடாக இருக்கும், அதன் மீது "ஆர்பிஐ""500" என்ற வார்த்தைகள் இருக்கும்.
3)ரூபாயை 45டிகிரி சாய்த்து பார்த்தால் கம்பிஇழை மற்றும் ரூபாயின் மதிப்பு நீல நிறமாகவும் நேராக பார்த்தால் பச்சை நிறமாகவும் இருக்கும்.
4)வாட்டர்மார்க்கிங் இதானது நவீன தொழில்ஙுட்ப்பமாகும் இதன்படி ரூபாயின் இடது ஓரத்தில் உள்ள பகுதியில் காந்தி அடிகளின் படமும் ரூபாயின் மதிப்பும் வெளிச்சத்தில் தூக்கி பார்த்தால் தெறியும்.
5)காந்தி அடிகளின் வலது ஓரத்தில் மிக ஙுண்ணிய அளவில் "ஆர்பிஐ""500" போன்ற பல எழுத்துக்கள் இருக்கும்.
6)ரூபாயின் பின்புறத்தில் அடிவாட்டில் அந்த ரூபாய் அச்சிடப்பட்ட வருடம் இருக்கும்.
இப்படிபல சிறப்புகளை நாம் சொல்லி கொண்டே போகலாம் இந்த ரூபாய்களின் பண்புகள் அடிகடி மாற்றப்படலாம்,மேலும் இப்போது பிளாஸ்டிக்கில் ரூபாயை வெளிவிடவும் ஆர்பிஐ பரிசீலித்து வருகின்றது.
உலகின் முதல் சூரிய சக்தி விமானம்: சுவிஸ் விமானிகள் சாதனை
அமெரிக்காவில் வாழும் சுவிட்சர்லாந்து நாட்டு விமானிகள் இருவர் சூரிய சக்தியினால் இயங்கும் ஒரு விமானத்தை வடிவமைத்துள்ளனர். 10 வருட கடின உழைப்பிற்குப் பின் இந்த விமானத்தை வடிவமைத்துள்ளதாக ஆண்ட்ரே போர்ச்பெர்க், பெட்ராண்ட் பிக்கார்ட் என்ற அந்த இரு விமானிகளும் தெரிவித்தனர்.
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியினால் இந்த விமானம் இயக்கப்படுவதால், இதற்கு எரிபொருள் தேவையில்லை. “மே 1-ம் தேதி மாப்போட் பீல்டில் தொடங்கும் இதன் பயணம் தொடங்குகிறது. பல நாடுகளை கடந்து, ஜூலை மாத இறுதியில் இந்த விமானம் நியூயார்க் நகரை அடையும்” என்று அந்த விமானிகள் தெரிவித்தனர்.
இதில் ஒரு விமானி மட்டுமே பயணம் செய்வார். ஆனால் இது பல செய்திகளை சுமந்து செல்கிறது என்றும் அந்த விமானிகள் கூறினர். முற்றிலும் சூரிய சக்தியினால் இயங்கும் முதல் விமானம் இதுவாகும்.
தெரியுமா? ஜடாயு பாறை!
ராவணன், சீதா தேவியை கடத்திக்கொண்டு ஆகாய மார்க்கமாக புஷ்பக விமானத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, சீதை, தன்னைக் காப்பாற்றுமாறு உதவிகேட்டு அலறினாள். அந்தக் குரல், ஜடாயுவின் காதிலும் கேட்டது. உடனே, சீதாதேவியை காப்பாற்றும்பொருட்டு ஜடாயு, ராவணனுடன் போரிட்டான். போரில் ராவணன் ஜடாயுவின் ஒரு இறக்கையை வாளால் வெட்டிவிட்டான். ஒரு இறக்கையை இழந்த ஜடாயு, ஒரு பாறை மீது விழுந்துவிட்டார். அது முதல் அந்தப் பாறை, ஜடாயு பாறை என்று அழைக்கப்படுகிறது.ராமாயண காலத்து புகழ்பெற்ற இந்த ஜடாயுபாறை, கேரளாவில் கொல்லம் மாவட்டம் கிளிமனூர் மற்றும் கொட்டாரக்கராய் என்ற கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது. தன் அழகிய தோற்றத்தால் பார்ப்பவர்கள் ஒவ்வொருவரையும் தன் பக்கம் கவர்கிறதுஅந்த கறுப்புப்பாறை. தற்போது, கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக இது விளங்குகிறது. பாறையின் மீது ஒரு நீர் ஊற்று உள்ளது. அதாவது, ராமனும் லட்சுமணனும், சீதா தேவியை தேடிக்கொண்டு ஜடாயு பாறைக்கு வந்தபோது, ஜடாயுவின் தாகம் தீர்க்கும் பொருட்டு ஸ்ரீராமனின் கால்பட்ட இடத்திலிருந்து தோன்றியதாகச் சொல்கிறார்கள். மலை உச்சியில் சிறிய ராமர் கோயிலும் உள்ளது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கைவினைபொருட்கள் திருவிழா இங்கு நடைபெறுகிறது. வெவ்வேறு பகுதியிலிருந்து கைவினைபொருட்களை கொண்டு வந்து இங்கு விற்கின்றனர். இந்த சமயத்தில் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீராமரை வழிபட்டுச் செல்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 அடி உயரத்திலிருக்கும் இந்த மலையில், சமீபத்தில் மிகப்பெரிய ஜடாயு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 60 அடி உயரமும், 200 அடி நீளமும் 150 அகலமும் கொண்ட இந்த சிலை, ஓர் இறக்கையை இழந்தபடி, மற்றொரு இறக்கையை விரித்து தலையை சற்று மேல்நோக்கி தூக்கியபடி காட்சி தருகிறது. பறவையின் உட்பகுதியில் மூன்று மாடி கட்டடம் உள்ளது. அதில், ஒரு மியூசியமும் மினி தியேட்டரும் உள்ளன. இதன் நுழை வாயில், பறவையின் கண்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலையாக கருதப்படுகிறது. தற்போது செதுக்கப்பட்ட சுமார் 18 அடி உயரம் கொண்ட ராமர்சிலையும் இங்குள்ளது.மலை உச்சியை அடைய பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக வழியெங்கும் குகைகளும், வண்ண விளக்குகளும், ஓய்வு கொள்ள வசதிகளும் உள்ளன. டீ, காஃபி, ஸ்நாக்ஸ் கடைகளும், சிறிய தங்கும் விடுதிகளும் உண்டு.ஜடாயு பாறை திரில்லிங்கான சுற்றுலாதலமாகவும், அதே சமயம், ஒரு பக்தி பயணமாகவும் அமைகின்றது. சபரி மலைக்கு யாத்திரை செல்லும் வழியில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
செல்லும் வழி: கேரளாவின் கொல்லத்திலிருந்து கிளிமனூர். இங்கிருந்து 14 கிலோ மீட்டரில் சடய மங்கலம் கிராமம். இங்குதான் ஜடாயு பாறை உள்ளது.
அன்னை தெரேசா - வரலாற்று நாயகி
குட்டையான உருவம், முகத்தில் சுருக்கம், எப்போதும் நீலக் கோடுகளைக் கொண்ட தூய்மையான வெள்ளையாடை, முகத்தில் எப்போதும் புன்னகை இவற்றை தாங்கியபடி உலக மக்களின் இதயத்தில் வலம் வந்தவர் அன்னை திரேசா. மகத்துவம்மிக்க மாபெரும் பணிகளை ஆற்றி வந்த இந்த மனிதநேயம் மரணித்து கடந்த (2012) செப்டெம்பர் 5 ஆம் திகதி பதினைந்து வருடங்கள் நிறைவு பெறுகிறது.
இவ்வொளி விளக்கு இவ்வுலகில் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்தது நாம் செய்த பாக்கியமே. யார் இந்த அன்னை திரேசா? கருணையே வடிவான இம்மலர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி அல்பேனியா நாட்டின் ஸ்கோப்ஜே என்ற குக்கிராமத்தில் பொஜாஸியு டிரேன், நிக்கோலா தம்பதியருக்கு கடைக்குட்டியாக பிறந்தது. ஞானஸ்நானத்தின் வழியே கொன்சா அக்னஸ் என்ற இனிய நாமத்தை சூடிக் கொண்ட இம்மலர் 1916 ஆம் ஆண்டு தனது ஐந்தாம் வயதில் முதல் நன்மை திருவருட்சாதனத்தை பெற்றுக் கொண்டது.
எந்தவொரு பணி வாழ்வில் ஈடுபடுவோரும் தமது வாழ்வில் மேடுபள்ளங்களை சந்திப்பது இயற்கையே. அப்படித்தான் இம்மலரின் வாழ்விலும் ஏற்பட்டது. தனது எட்டாவது வயதில் தந்தையை இழந்தது. இதனால் இக்குடும்பம் பெரும் பாதிப்புக்குள்ளானது. இத்தகைய சூழலில் இம்மலர் இறைபக்தியிலும் சமூக சேவையிலும் நாட்டம் செலுத்தியது. தனது பங்கு ஆலயத்தில் பல புனிதர்களின் தியாகம்மிக்க வரலாறுகளை படித்தறிந்ததன் மூலம் அதன் வழியே மக்களுக்கு சேவைகள் புரிவது குறித்து உணர்ந்து கொண்டது. அத்துடன் தனது பன்னிரெண்டாவது வயதில் ஒரு அருட் சகோதரியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தையும் தன்னகத்தே கொண்டது.
அதன்படியே 1928 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் பதினெட்டாவது வயதில் தனது தாய் மற்றும் பங்குத் தந்தையின் ஆசியுடன் துறவறப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து அயர்லாந்தில் உள்ள லொரேடோ புனித கன்னிமரியாள் சபையில் சேர்ந்து பணியாற்ற விழைந்தார். இச்சபையின் துறவிகளை "பிரசங்க கன்னியர்' என அழைப்பர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா சென்று பணியாற்றும்படி இவருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆகவே 1929 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி இந்திய பெருந்தேசத்தின் கல்கத்தா நோக்கி பயணமானார். அங்கு சென்ற இவர் தனது துறவற மடத்தின் வேண்டுகோளின்படி இறையியல் படிப்பையும், ஆசிரியர் பயிற்சியையும் மேற்கொண்டார்.
அதே ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி தனது "அர்ப்பண உறுதி' வார்த்தைப்பாட்டின் போது கொன்சா அக்னஸ், புனித குழந்தை திரேசாவின் கன்னிமை வாழ்வின் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை திரேசா எனத் திரித்துக் கொண்டார். அத்துடன் கல்கத்தாவில் புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் சில காலம் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றினார்.
1931 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி அருட் சகோதரியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். 1937 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி இறுதி அர்ப்பண உறுதி வார்த்தைப்பாட்டினை வழங்கினார். அன்னையவர் 1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி தனது வருடாந்த ஞான ஒடுக்கத்திற்காக டார்ஜிங் சென்று திரும்புகையில் அவருக்கான இறையழைத்தல் வேறாக இருந்தது. தனது உள்ளத்து உணர்வுகள் இறை ஏவுதலால் நிரம்பப் பெற்றிருப்பதை உணர்ந்தார். ஏற்கனவே ஏழைகள், கைவிடப்பட்டோர், அநாதைகள் குறித்த சிந்தனைகளில் நெருடப்பட்டிருந்த அவர் மனம் ஏழைகளுக்காகவும், கைவிடப்பட்ட நிலையில் வாழும் அநாதைகளுக்காகவும் குஷ்டரோகிகளுக்காகவும் ஒரு துறவற சபையை உருவாக்கும் சிந்தனைக்குள் ஆட்பட்டது.
ஆகவே தனது ஆன்ம குருவாகிய வான்எக்சம் அடிகளிடம் தனது எண்ணத்தை தெரிவித்து அவரின் நல்லாசியுடன் ஆயரின் அனுமதியையும் பெற்றார். அதன் பிரதிபலன் 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி லொரேடோ சபையிலிருந்து வெளியேறி இந்திய கலாசாரத்திற்குள் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும் விதத்தில் நீலநிறக் கோடுகளைக் கொண்ட வெள்ளை நிறச் சேலையை தூய்மையின் சின்னமாக தேர்ந்து கொண்டார். இது அன்னையவர் தனது பணிக்கு அடித்தளமிட்ட முதல் அத்திவாரமாகும். தொடர்ந்து மூன்று மாதம் மருத்துவ படிப்பினையை மேற்கொண்ட இவர் அதே வருடம் டிசெம்பர் 21 ஆம் திகதி தொடங்கி பெற்றோரால் கைவிடப்பட்ட பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர், யாருமற்ற அநாதைகள், காசநோய் மற்றும் குஷ்டரோகங்களால் அவதிப்பட்டோரை நாடிச் செல்லலானார். அவர்களுக்கு தஞ்சமளிக்கும் தாயானார்.
எந்தவொரு பணியிலும் ஏமாற்றங்கள் தாக்கங்கள் ஏற்படுவது இயல்பே. இதற்கு அன்னையும் விதிவிலக்கல்ல. ஆரம்பக் காலத்தில் பல தடைகள் ஏற்பட்டன. ஆனால் யாவற்றையும் கருணையே வடிவான தனது புன்னகையால் வெற்றி கொண்டார். ஒருமுறை அன்னையவர் தனது அன்பு உறவுகளுக்காக உதவி கேட்டு ஒரு வர்த்தகரிடம் கையேந்தினார். ஆனால் அந்த வர்த்தகரோ அன்னையின் நோக்கத்தை உணராது அக்கரத்தின் மீது எச்சிலை உமிழ்ந்தார். உடனே அன்னையவர் அக்கரத்தை மடித்தபடி மறுகரத்தை நீட்டி எனக்குரியதை தந்து விட்டீர்கள். இனி அவர்களுக்காக உங்களால் முடிந்ததை தாருங்கள் என்றார். ஆக, அன்னையின் செயலில் மனம் நெகிழ்ந்து போன அந்த வர்த்தகர் தேவையான உதவியை வாரி வழங்கினார்.
இதனிடையே அன்னையவர் தினமும் கரத்தில் செபமாலையை ஏந்தி செபித்து அனுதினமும் திவ்விய நற்கருணையை உட்கொண்டு இறைவனின் சந்நிதியில் சங்கமிக்கலானார்.
அன்னையின் வழியில் பல மாணவர்கள் இணைந்து கொள்ளலாயினர். அவரின் இப்பணிகளை அவதானித்து வந்த கல்கத்தா மறை மாவட்ட திருச்சபை அன்னை உருவாக்கிய அன்பின் துறவற சபையை அங்கீகரித்தது. 1954 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி அச்சபையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். அத்துடன் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது சபை கன்னியர்களை நாட்டின் பல பகுதிகளுக்கும் பணியாற்ற அனுப்பி வைத்தார்.
1965 ஆம் ஆண்டு அப்போதைய திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் இச்சபைக்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார். அத்துடன் வெனிசுலா நாட்டிலும் இச்சபையை ஆரம்பிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. வெனிசுலாவில் மட்டுமன்றி உரோம், தன்சானியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இத்துறவற சபை வேர்விடத் தொடங்கியது. அந்நாடுகளில் வாழும் ஏராளமான கன்னியர் இச்சபையினூடாக துறவறப் பணிக்குள் இணைந்து சேவையாற்ற விளைந்தனர். இத்தகைய நிலையில் சபையின் உயர் நோக்கத்தை அறிந்துணர்ந்த பெரும் செல்வந்தர்கள், அமைப்புகள், அரச மட்டத்திலான தூதரகங்கள் உதவிகளை வாரி வழங்கத் தொடங்கினர்.
மேலும் அன்னை அருட் தந்தையர், அருட் சகோதரர்கள், தனது மாணவர்களினதும் வறிய மக்களினதும் ஆன்மிக நலன் மற்றும் சேவைகளை கருத்திற் கொண்டு Missionaries of charity brothers, Contemplative branch of the sisters, Contemplative brothers The Missonaries of charity fathers, Day Missionaries of charity போன்ற பெயர்களில் பல அமைப்புகளை உருவாக்கினார். அத்துடன் பல அருட் தந்தையர்களின் வேண்டுகோளுக்கிணங்க இயேசுவின் திருவுடல், திரு இரத்த இயக்கத்தையும் ஆரம்பித்தார். இச்சபைகள் 1980 1990 காலப் பகுதியில் சோவியத் யூனியன், அல்பேனியா, கியூபா உள்ளடங்கலாக கொம்யூனிச நாடுகளிலும் ஸ்தாபிக்கப்பட்டது. இவற்றினூடாக யாவரினதும் கண்கள் அவரின்பால் திரும்பின. 1962 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம ஸ்ரீ பட்டத்தை வழங்கி கௌரவித்தது. 1979 ஆம் ஆண்டு சர்வதேச விருதான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு அமெரிக்கா கௌரவ பிரஜை உரிமையை வழங்கியது. மேலும் அன்னையவர் ஏராளமான விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது அவரின் வழியில் சராசரியாக 5000 அருட் சகோதரிகள் பணியாற்றினர். அத்துடன் உலகின் 123 நாடுகளில் அன்பின் துறவற சபை 713 கிளைகளைக் கொண்டிருந்தது. 1967 ஆம் ஆண்டு அப்போதைய கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கருதினால் தோமஸ் குரே ஆண்டகையின் அழைப்பின் பேரில் அன்னையவர் இரு அருட் சகோதரிகளுடன் இலங்கை வந்து இரு மாதங்கள் தங்கியிருந்தார்.
அவ்வேளையில் சேரிப் புறங்களுக்குச் சென்று பல உதவிகளை புரிந்தமை நினைவு கூரத்தக்கது. செக்கடித்தெரு புனித அன்னம்மாள் பங்கில் "பிரேம் நிவாஸ' எனும் பெயரில் சபை ஆரம்பிக்கப்பட்டது. காலப் போக்கில் இடவசதியின்மை காரணமாக அது முகத்துவாரம் சாந்தி நிவாஸவிற்கு மாற்றப்பட்டு சேவைதனை தற்போது தொடர்கிறது. அத்துடன் மொரட்டுவ, கண்டி, திருகோணமலை, வவுனியா, குருநாகல், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் அன்னையின் வழியில் சேவை இல்லங்கள் நன்கு செயல்பட்டு வருகின்றன. அர்ப்பணிப்பின் இலக்கணம், சேவைகளின் பிரதிவிம்பம் அன்னை திரேசா 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி இறைவனால் தனக்கு வழங்கப்பட்ட பெறுமதி மிக்க காலப் பகுதியை ஏழைகள், பிணியாளர்கள், துன்பப்பட்டவர்கள், அநாதைகள் ஆகியோருடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்த ஆறுதலுடன் இறை சந்நிதியில் சங்கமித்தார்.
அன்னை திரேசா காலமாகிய பின் அவரில் விசுவாசங் கொண்டு கடும் புற்றுநோயினால் அவதிப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மோனிகா பேஸ்ரா என்ற மாது அன்னையிடம் தனது புற்றுநோய் சுகமாக தினமும் மன்றாட வந்தார். அதன்படியே அவர் பரிபூரணமாக குணமடைந்தமை நிரூபிக்கப்பட்டது. அத்துடன் மேலும் பல புதுமைகள் நிகழ்ந்தமையை காலஞ் சென்ற திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் சின்னப்பர் ஏற்றுக் கொண்டதுடன், அவர் திருச்சபையை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்ற 25 வருட நிறைவு வெள்ளிவிழா திருப்பலியின் போது பல்லாயிரம் மக்கள் வத்திக்கானில் ஒன்று திரண்டிருக்க அன்னையை முத்திப் பேறுபெற்ற (அருளாளர்) திரேசா என பகிரங்கப்படுத்தினார். அன்னை திரேசாவின் வழியே அப்பொறுப்பினை தற்போது ஏற்று அன்பின் துறவற சபையை வழி நடத்தி வரும் அருட் சகோதரி நிர்மலா உள்ளிட்ட உலகெங்கும் பரந்து வாழும் அன்னை திரேசாவின் அன்பின் துறவற சபையின் அருட் சகோதரிகளின் பணிகள் மென்மேலும் விரிவடைந்து அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழ இறைவனை நோக்கி மன்றாடுவோம்
நீ கருவுற்று இருந்தால் ஒரு குழந்தைக்கு தான் தாயாகி இருப்பாய்
ஆனால், நீ கருணையுற்றதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறாய்.
THANKS TO BUSYBEE4U BLOG..!!
வீட்டிலேயே தயாரிக்கலாம் மின்சாரம்!
குறைந்த செலவில் வீட்டிலேயே காற்றாலையை அமைத்து மின்சாரம் தயாரித்து வருகிறார்கள் இரண்டு இளைஞர்கள்
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்சாரத் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் மின்சாரத் தேவைகளுக்காக, ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாட்டைத் தீர்க்க புது முயற்சியாக, உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த சுரேஷ், ராமு என்ற இரு இளைஞர்கள், ஆறாயிரம் ரூபாய் செலவில் காற்றாலையை உருவாக்கியுள்ளனர்.
சுரேஷ், ஐ.டி.ஐ. படித்தவர். ராமு, எலெக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறார். பெரிய காற்றாலைகள்போல் இல்லாமல், வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைத்து இயக்கக்கூடிய வகையில் இந்தக் காற்றாலையை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
சுரேஷ் வீட்டின் மொட்டை மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்புகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கைகளைப் பொருத்தியுள்ளனர். அதில் டைனமோவைப் பொருத்தி இறக்கைகளை சுழலுமாறு வடிவமைத்துள்ளனர். டைனமோவின் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தை ஒரு பெல்ட் மூலம் இணைத்துள்ளனர். இதனால் காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு இறக்கைகள் சுற்றும்போது அதன் மூலம் டைனமோ மின்சாரம் இயக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
எங்கள் வீட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டைப் போக்க காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டோம். ஆனால், காற்றாலையை உருவாக்க, எங்களுக்குப் போதுமான உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் நாங்களே உதிரி பாகங்களை உருவாக்கினோம். பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை வெட்டி இறக்கையாக மாற்றினோம். அதேபோல கிரைண்டரில் பயன்படுத்தும் சக்கரத்தை இதில் பயன்படுத்தியுள்ளோம். டைனமோவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, ஒரு மின் கம்பியின் உதவியுடன் பேட்டரியில் சேமிக்கிறோம்" என்கிறார் சுரேஷ்.
ஜெனரேட்டர், இன்வெட்டர் போன்ற சாதனங்களை வாங்கினால் அதிக செலவாகும். வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவழித்து காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம். இதை அனைத்து வீடுகளிலும் பயன்படுத்தலாம்" என்கிறார் ராமு.
மின்தட்டுப்பாடு இல்லாத நேரத்தில்கூட, சுரேஷின் வீட்டில் அவர் தயாரித்திருக்கும் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த சுரேஷ், தற்போது 300 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்துகிறார்.
தேசிய நெடுஞ்சாலைகள், கடலோரப் பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும், காற்றைக் கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தையே பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான பொருள்களை நிறுவனங்கள் செய்து கொடுத்தால், இன்னும் குறைவான செலவில், அதிகளவில் உற்பத்தியைக் கொடுக்க முடியும்" என்கின்றனர் இந்த இளைஞர்கள்.
சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் இந்த இளைஞர்களை ஊக்குவிப்பதுடன் மக்களுக்கும் உதவும் நோக்கத்துடன் செயலில் இறங்க விண்ணப்பிக்கும் தமிழ் உள்ளங்கள்...
Thanks - Jai Krishana
பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்!
1.அடோப் (ADOBE):
இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.
2. ஆப்பிள் (APPLE):
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே.
எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும்
என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும்.ஜாப்ஸ்
மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.
3. கூகுள் (GOOGLE):
சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒருமுதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம்கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.
4.ஹாட் மெயில் (HOTMAIL):
இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற
பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப்
பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text
Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது.
5. இன்டெல் (INTEL):
இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை
"Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர்
பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பத தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது.
6. மைக்ரோசாப்ட் (MICROSOFT):
பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம்.
அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.
7. யாஹூ (YAHOO):
தொடக்கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another
Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும் டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.!!!
உங்கள் கணினியில் தொலைக்காட்சி பார்க்க - மென்பொருள்
இப்போதெல்லாம் கணினியிலே எல்லோருக்கும் காலம்
போய்க்கொண்டிருக்கிறது. முன்பு பொழுது போக்கு சாதனங்களாக
அமைந்த தொலைக்கட்சி , வானொலிகளை இப்போது நடுவது
குறைவாகிவிட்டது. இதற்கு காரணம் எல்லாமே கணினி அக்கிரமித்துகொண்டதுதான்.
அந்தவகையில் கணினியில் இருந்தவாறே
உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட
தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க
ஒரு இலவச மென்பொருள் READON TV MOVIE RADIO PLAYER.
இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளில் இருந்து ஒலி, ஒளி
பரப்பப்படும் 1000 க்கு மேற்பட்ட தொலைக்காட்சி மற்றும்
வானொலிகளை பார்த்து கேட்டு ரசிக்க முடிவதுடன் அவற்றை
பதிவு செய்ய வசதியும் உண்டு. ஆடியோ க்களை MP3 வடிவில்
பதிவு செய்யலாம் .
FLASH GAMES , AUDIO , VIDEO பைல்களை சேர்ச் செய்யும்
வசதி உண்டு.
இந்த மென்பொருளில் இருந்தவாறு மிக அண்மையில் வெளியாகிய
திரைப்படங்களை வீடியோ சேர்ச் மூலம் பெறலாம்.
1000 க்கு மேற்பட்ட FLASH GAMES வசதியினை ஆன்லைனில்
தருகிறது.
இந்த வசதியினை பெற இந்த மென்பொருளில் PLUGINS என்ற
மெனுவிற்கு சென்று உங்களுக்கு விரும்பியதை இன்ஸ்டால்
செய்யல்லாம்.
youtube தளத்திற்கான இணைப்பும் உள்ளது.
இது விண்டோஸ் இயங்கு தளத்தில் செயல்பட வல்லது.
உலக அதிசியம் சிசென் இட்ஸா பற்றிய தகவல் !
உலக அதிசியத்தில் இதவும் ஒன்று .பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 7-ம் நூற்றாண்டில் இட்ஸா என்று அழைக்கப்பட்ட வீரர் கூட்டம், வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நகரம் ஒன்றைக் கைப்பற்றியது. அன்று முதல் அந்த நகரம் சிசென் இட்ஸா என்று வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அந்த நகரில் ஏராளமான மாளிகைகளையும், கோவில்களையும், நினைவுச் சின்னங்களையும் கட்டினார்கள். மாயர்கள் என வரலாற்றில் குறிக்கப்படும் அந்நகர மக்கள் சிறந்த போர் வீரர்கள் மட்டுமின்றி அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். வானில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்வதற்காக அவர்கள் கட்டியுள்ள ஆய்வகமே இதற்கு சாட்சி. நத்தை வடிவில் உருவாக்கப்பட்ட இந்த ஆய்வகத்தின் அறைகளில் விழும் நிழலை வைத்தே அவர்கள் பல்வேறு வானிலைகளை கணித்தனர்.
வரலாற்றை எழுதி வைக்கும் அரிய பழக்கமும் மாயர்களிடம் இருந்திருக்கிறது. பந்து விளையாட்டுகளிலும் இவர்கள் அதிக ஈடுபாடு காட்டினர். எனவே இதற்கென நீண்ட விசாலமான பல மைதானங்களையும் உருவாக்கியுள்ளனர். அதில் ஒன்றின் நீளம் 545 அடி, அகலம் 232 அடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மைதானத்தின் உட்புற சுவர்களில் வீரர்கள் பந்து விளையாடுவது போலவும், தோற்ற அணித் தலைவரின் தலை வெட்டப்படுவது போலவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இந்த நகரின் மையப்பகுதியில் பிரமிட் வடிவில் அமைந்துள்ள குகுல்கன் கோவில் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்கிறது. குகுல்கன் எனப்படும் இறக்கை முளைத்த பாம்புதான் மாயர்களின் முக்கிய கடவுள். எனவே அதற்காக இந்த பிரம்மாண்ட கோவிலை உருவாக்கியுள்ளனர். கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த கோவிலின் நான்கு புறங்களிலும் உச்சியை நோக்கி படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படிக்கட்டுகளின் கைப்பிடி சுவரின் அடிப்பாகம் ராட்ச பாம்பைப் போல உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்டின் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் இதன் நிழல் அருகில் உள்ள சுவரில் விழும் விதத்தில் மிக நேர்த்தியாக, ஆச்சரியப்படும் படி, இந்த கோவிலை வடிவமைத்துள்ளனர்.
சிசென் இட்ஸாவைச் சுற்றி இரண்டு ராட்சத கிணறுகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது பலி கிணறு. இது மாயர்களின் மழைக் கடவுளான சாக்கை (சிலீணீணீநீ) வழிபட்டவர்களின் புனிதக் கிணறு. இந்த கிணற்றில் பானை முதல் விலை உயர்ந்த நவரத்தினங்கள் வரை பல பொருட்களை மக்கள், சாக் தெய்வத்திற்கு படையலாக போட்டு உள்ளனர். பஞ்ச காலங்களில் நரபலியும் கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இவை தவிர போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் ஆயிரம் தூண்களுடன் கோவில், தாடி மனிதன் கோவில், மான் கோவில் என பல கோவில்கள் இங்கு காணப்படுகின்றன.
இவ்வளவு சிறப்பான கட்டிடங்களை உருவாக்கிய மாயர்கள் திடீரென ஒருநாள் இந்த நகரைவிட்டுச் செல்ல முடிவெடுத்தனர். இதற்கான காரணம் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. ஆனால் சிசென் இட்ஸாவை சுற்றியுள்ள குகைகளில் அவர்கள் பயன்படுத்திய பானை உள்பட பல்வேறு அபூர்வ பொருட்கள் இன்னும் அப்படியே உள்ளன. இவை காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன.
மேஜிக் !மேஜிக் !மேஜிக் !
நண்பரிடம் இப்படிச் சொல்லுங்கள் :
1 . ஏதாவது ஒரு எண்ணை நினைத்துக்கொள் .
2 . அதை இரு மடங்காக்கு .
3 . வரும் விடையுடன் 4 - ஐ கூட்டு .
4 . வரும் விடையை 2 - ஆல் வகு .
5 . வரும் விடையைச் சொல் ... நீ நினைத்த எண்ணைச் சொல்கிறேன் .
அவர் சொல்லும் எண்ணிலிருந்து 2 - ஐ கழித்துச் சொல்லுங்கள் ... '
ஒரு உதாரணம் :
நண்பர் நினைத்த எண் = 15 ; இரு மடங்காக்கினால் 30 ; 4 - ஐக் கூட்டினால் 34 ; 2 ஆல் வகுத்தால் 17 ; இதில் நீங்கள் 2 -ஐ கழித்தால் , நண்பர் நினைத்த எண் 15 .
உலக அதிசியம் பிரமிடு பற்றிய தகவல் !
நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசியங்களில் மிக முக்கியமான ஒன்று பிரமிடு உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தை கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடைக்கிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான 'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.
தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விடையங்களை உள்ளடக்கியதுஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .
இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்டு க்ரநைட் சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வராலாற்று ஆய்வலர்கள் கருத்து .
கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் .பைதகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுல்லதை ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.மற்றுமொரு அதிசய விடயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கெட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில்உள்ளது.
ஆராய்ச்சியாளர்களின்ஆய்வுக்கு பெரும்சவாலாக உள்ளது !இன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ளரோபோட்களை உள் செலுத்தி உலகம்முழுவதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்குபின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக மனிதனின் அதிசய தக்க ஆற்றல் அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும் இல்லை.
பிரமிக்கத் தக்க முறையில் கட்டப் பட்டுள்ள பிரமிட் கூம்பகம் பண்டைக்கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச்சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய வருகின்றது. பிரமிட்களும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [Stonehenge, Ireland] போலக் கற்தூண் காலங் காட்டியாக [Megalithic Calendars] கருதப் படுகின்றன.
இந்த பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டு பிடிக்க பட்டு உள்ளது
மம்மிப்படுத்துதல் பற்றி ...
1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்திப் பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் அவரை அலம்புவார்கள்.
2. உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.
3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டுக் கல் உப்பில் பதப்படுத்தப்படும்.
4. இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.
5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள்.
6. உடல் கல் உப்பால் மூடப்படும்.
7. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணைகளைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும்.
8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.
9. உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.
10. மம்மி இப்போது அடக்கத்திற்குத் தயார்.
ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட கதை சுவாரஸியமானது.
'அழித்தல்' என்ற வார்த்தையை யாரும் விரும்புவதில்லை. இதற்கு ரப்பர் மட்டும் விதிவிலக்கு. பென்சில் பயன்படுத்தும் அனைவரும் ரப்பர் வைத்திருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. பல வண்ணங்களில், வடிவங்களில் காணப்படும் அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கப்பட்ட கதை சுவாரஸியமானது.
18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் அமெரிக்காவின் காட்டுப் பகுதியில் வசித்த பழங்குடியினர், ஒரு வகை மரத்திலிருந்து கிடைக்கும் கெட்டியான பாலை உருண்டையாக்கி அதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அதே பாலை தங்கள் உடலில் பூசி, அதன் மீது இறகுகளை ஒட்டிக் கொண்டனர்.
அப்பகுதியில் சுற்றுலா சென்ற பிரெஞ்சு விஞ்ஞானி ஒருவர் இதைக் கண்டு ஆச்சரியம் கொண்டதோடு, வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார். அதன் பின் 1770ம் ஆண்டு பிரபல விஞ்ஞானி சர் ஜோசப் பிரீஸ்ட்லே, இந்த மரத்திலிருந்து பாலை எடுத்து, அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து, ரப்பரின் குணங்களை வெளிப்படுதினார்.
அதே ஆண்டு, ரப்பர் துண்டுகளை வைத்து பிரிட்டன் பொறியாளர் எட்வர்டு நெய்மே ஆய்வுகள் செய்தார். சில குறிப்புகளை பென்சிலால் எழுதும் போது தவறுகள் ஏற்படவே, அதை அழிக்க ரொட்டித் தூள்களை எடுப்பதற்கு பதிலாக (அந்தக் காலத்தில் பென்சில் எழுத்துக்களை அழிக்க ரொட்டித் தூள்களைப் பயன்படுத்துவர்) தவறுதலாக ரப்பர் துண்டுகளை எடுத்து அழித்தார். பென்சில் எழுத்துக்கள் சுத்தமாகவும் விரைவாகவும் அழிப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டு, உடனே களத்தில் இறங்கினார். பென்சில் எழுத்துக்களை அழிக்கும் ரப்பர் துண்டுகளை சந்தைக்கு அறிமுகம் செய்தார்.
உணவைப் போலவே, ரப்பரும் சில நாட்களில் கெட்டுப் போகும் தன்மை கொண்டது. இதனால் ரப்பரை பல நாட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வைக் கண்டுபிடித்தார் சார்லஸ் குட்இயர். 1839ம் ஆண்டு கந்தகத்தைப் பயன்படுத்தி ரப்பரை கெட்டியாக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எத்தனை ஆண்டுகளானாலும், கெட்டுப் போகாத ரப்பர் ரப்பர் நமக்குக் கிடைத்துள்ளது.
தஞ்சை பெரிய கோவில் – அரிய தகவல்கள் !
அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது. இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..
எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது. ஒரு முழமே இருவிரல் நீட்டித்து பதினாறு விரல் அகலத்து, ஆறுவிரல் உசரத்து பீடம், ஒரு விரலோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம்.
தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்பதே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.
இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.
சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.
அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.
கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.
இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் , நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள் மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின.
அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.
மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
உலகை அதிர வைத்த படம்..!
1985ம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்த நிலையில், பாகிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகக் குடியேற, அங்கு சென்ற நேஷனல் ஜியோகிராபிக் போட்டோகிராபர் ஸ்டீவ் மெக்கர்ரி இந்தப் பெண்ணின் படத்தைப் பிடித்தார். எதிர்காலம் குறித்த கேள்வியும், அச்சமுமாக இந்தச் சிறுமியின் அவலம் நிறைந்த முகத்தை நேஷனல் ஜியோகிராபிக் இதழ் தனது அட்டைப் படத்தில் வெளியிட, உலகம் ஆடிப்போனது. இதுவரை வெளியான நேஷனல் ஜியோகிராபிக் அட்டைப் படங்களிலேயே மிகச் சிறந்த படமாக இன்று வரை இதுவே முன் நிற்கிறது.
தென் அமெரிக்காவில் அதிசயம் !!
தென் அமெரிக்காவில் முழுவதும் தோண்டிப் பார்க்கும் போது விநாயகர் சிலைகள் கிடைகின்றன. யானை வடிவத்துடன் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த தெய்வச் சிலைகளைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். இதில் என்ன வியப்பு என்று கேட்க்கிறீர்களா? தென் அமெரிக்கப் பகுதிகளில் யானைகளே இருந்ததில்லை, இன்றும் வாழ்வதில்லை என்பது தான் அந்த வியப்பிற்கு காரணம். மேலும் இப்பகுதி மக்கள் சூரியனை வழிபடும் பழக்கம் கொண்டவர்கள்.
டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது.!!
டைட்டானிக்..
டைட்டானிக் படத்தை எடுத்த ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து, அந்தக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற முழு ஆராய்ச்சியை நடத்தியது நேஷனல் ஜியோகிராபிக். 1912ம் ஆண்டு ஏப்ரலில் இந்தக் கப்பல் மூழ்கிய இடத்தில் ஏராளமான சிறிய நீர்மூழ்கிகள், தடயவியல் நிபுணர்கள், கடலடி ஆய்வாளர்கள் உதவியோடு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு கப்பல் மூழ்கியதற்கு, அது நேரடியாக பனிக் கட்டியில் மோதாமல், மோதலைத் தவிர்க்க கடைசி நேரத்தில் திருப்பப்பட்டு, பக்கவட்டில் மோதியதே காரணம் என்பது கண்டறியப்பட்டது.
மருந்தாக மாறிய விஷம்!
1600ம் ஆண்டுவாக்கில், தென் அமெரிக்க மலைப் பகுதியில் அடங்காத காய்ச்சலால் அவதியுற்று, தட்டுத் தடுமாறி நடந்து வருகிறார் பழங்குடி இனத்தவர் ஒருவர். காய்ச்சலுடன் சேர்த்து தாகமும் வாட்டி எடுக்க, தண்ணீர் தேடி அலைகிறார். கடைசியாக ஒரு குட்டையில் தண்ணீர் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து, அதைக் குடிக்கிறார். தண்ணீர் இனிப்பதற்கு பதிலாக கடுமையாக கசந்தது. அதற்கு காரணம், அந்தக் குட்டையின் நடுவில் இருந்த கொய்னா என்ற விஷ மரம் என்பதைக் கண்டு அதிர்ச்சியாகிறார்.
ஆனால், அதிர்ச்சி மெல்ல மெல்ல ஆனந்தமாக மாறியது. அவரது காய்ச்சல் குறைந்து உடல் சுறுசுறுப்பாகியது. இந்த விஷயம் அங்கு காட்டுத் தீ போல பரவ, அதன் பின் அந்த மரத்தையும், குட்டையையும் கடவுளாகவே மதிக்கத் தொடங்கி விட்டனர் பழங்குடியினர். அங்க்கு முகாமிட்டிருந்த சமய பிரச்சார அறக்கட்டளையின் மருத்துவர்கள், இதைக் கேள்விப்பட்டு மரத்தை ஆய்வு செய்தனர்.
மரப்பட்டையில் இருக்கும் ரசாயனம் காய்ச்சலை குணமாக்குவதை அவர்கள் அறிந்தனர். விடுவார்களா விஞ்ஞானிகள்... உடனே அந்த மரத்தின் பட்டைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதிலுள்ள குயினின் ரசாயனத்துக்கு, மலேரியாவை குணமாக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதை1631ம் ஆண்டு கண்டறிந்தனர்.
அன்று முதல், மலேரியாவுக்கு தடுப்பு மருந்தாக குயினின் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'மருந்தாகும் விஷம்' என்ற கூற்று, குயினின் விஷயத்தில் உண்மையாகியிருக்கிறது பார்த்தீர்களா?
அலட்சியத்தால் உருவான உயிர்காக்கும் மருந்து!
1928ம் ஆண்டு தனது ஆய்வகத்தில், ஸ்டாபிலோகோக்கி (staphylococci) என்ற பாக்டீரியாவை வைத்து, தொற்று நோய்கள் குறித்த மிகப் பெரிய ஆராய்ச்சியை ஃபிளெமிங் செய்து கொண்டிருந்தார். வழக்கமாக ஆய்வுக் கூடத்தை விட்டு வெளியேறும் போது, அனைத்து கருவிகள் மற்றும் குடுவைகளை சுத்தம் செய்து விட்டுத்தான் கிளம்புவார். ஆனால் ஒருநாள் சில குடுவைகளை சுத்தம் செய்யாமலேயே ஃபிளெமிங் கிளம்பி விட்டார்.
அதன் பின் அந்த ஆய்வகத்தை பல நாட்கள் அவர் பயன்படுத்தவில்லை. ஒருநாள் மீண்டும் ஆராய்ச்சியைத் துவக்குவதற்காக அந்த ஆய்வுக் கூடத்துக்கு சென்றார். நுண்ணுயிர்கள் வைத்திருந்த குடுவையை தன் அலட்சியத்தால் சுத்தம் செய்யாமல் விட்டதால், அது கெட்டுப் போய் பூஞ்சை பிடித்திருந்ததைக் கண்டார். இனி அதைப் பயன்படுத்த முடியாது என்பதால் வீசியெறிய முற்பட்டார். ஆனால் இங்கு தான் ஃபிளெமிங்கின் விஞ்ஞானி மூளை விழித்துக் கொண்டது. குடுவையை உற்றுப் பார்த்தார். அதன் ஒரு சில பகுதிகள் மட்டும் கெட்டுப்போகாமல் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஆனால் அந்தப் பகுதிகளைச் சுற்றியும் பூஞ்சை பிடித்திருந்ததால், ஃபிளெமிங்கின் ஆய்வகம் பரபரப்பானது.
அதை வைத்து பல கோணங்களில் ஆய்வு செய்த ஃபிளெமிங், பாக்டீரியாக்கள் பரவுவதை சில பூஞ்சைகள் தடுத்திருப்பதைக் கண்டார். இறுதியில் பென்சிலியம் என்ற அந்த பூஞ்சைகளில் இருந்து பென்சிலின் மருந்தை அவர் கண்டுபிடித்தார். ஹோவர்டு ஃபுளோரே என்ற விஞ்ஞானியின் தலைமையிலான மருத்துவக் குழு, இந்த மருந்தை முதலில் உற்பத்தி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
ஃபிளெமிங்கின் அலட்சியத்தால் அவருக்கு பரிசாக வெற்றி கிடைத்தது. இது நூற்றுக்கு ஒரு சதவீதம் தான். மீதி 99 சதவீதம் பேருக்கு அலட்சியத்தால் அவதிகள் தான் பரிசாகக் கிடைத்திருக்கும்...கிடைக்கிறது... கிடைக்கும்!
செயற்கைக்கோள் எப்படிப் பறக்கிறது?
விண்வெளி - செயற்கைக்கோள்
வானில் விமானம் பறக்க எரிபொருள் தேவை. ராக்கெட் உயரே செல்லவும் எரிபொருள் தேவை. ஆனால் ஓயாமல் பூமியைச் சுற்றிகொண்டிருக்கிற செயற்கைக் கோளுக்கு எந்த எரிபொருளும் தேவை இல்லை.
பூமியைச் சுற்றும் செயற்கைக் கோள்.
செயற்கைக் கோள் ஒரு முறை பூமியைச் சுற்றிவர பல்லாயிரம் கிலோமீட்டர் பறக்க வேண்டும். இப்படியாக அது பல்லாண்டுகள் பூமியைச் சுற்றி வருகிறது. செயற்கைக் கோள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு, அதாவது பூமியின் ஈர்ப்பு விசையினால், சுற்றி வருகிறது. ஆகவே அதற்கு எரிபொருள் தேவையில்லை.
பூமியைச் சந்திரன் கோடானு கோடி ஆண்டுகளாகச் சுற்றி வருகிறது. சந்திரனில் எந்த எஞ்சினும் இல்லை, எரிபொருளும் இல்லை. சூரியனை பூமி சுற்றி வரவில்லையா, அது போலத்தான்.
ராக்கெட்டானது உயரே சென்று உரிய வேகத்தில் ஒரு செயற்கோளை விண்ணில் செலுத்திய பிறகு அந்த செயற்கைக்கோள் தன் பாட்டுக்கு பூமியைச் சுற்றி வருவதில் வியப்பு ஏதும் இல்லை.
உங்கள் வீட்டு அம்மிக் கல்லை இப்படி விண்வெளியில் செலுத்தினால், அதுவும் செயற்கைக் கோள் போல பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும். அம்மிக் கல்லைச் செலுத்துவதாக இருந்தாலும் சரி, நான்கு டன் எடை கொண்ட செயற்கைக் கோளைச் செலுத்துவதாக இருந்தாலும் சரி, ராக்கெட்டை ஒரே குறிப்பிட்ட வேகத்தில் ஏவினால் போதும். எடை அதிகரிக்க அதிகரிக்க மேலும் அதிகத் திறன் கொண்ட ராக்கெட் தேவை, அவ்வளவுதான்.
VIA-PRABHU
FACEBOOK உருவான கதை
அன்பு நண்பர்களே இவை என் பதிப்பு இல்லையென்றாலும் உங்களுக்கு உதவும் என்பதே என் மகிழ்ச்சி ..
கிழே இருப்பவர் FACEBOOK OWNER - facebook owner mark zuckerberg.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு.
அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இப்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பி னராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும்.
2005
காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணைய தளம், இப்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. அது நம் காலத்தின் (காதலின்?) அதிசயம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் ஆறே வருடங்களில் இந்த பிரமாண்ட அதிசயம் நடந்திருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் கம்பெனிகளில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.
இவ்வளவுக்கும் ஃபேஸ்புக் லாபம் குவிக்கும் நிறுவனமாக இல்லை. 2009-ம் ஆண்டில்தான் முதன்முதலாக அது லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. ஆனால், அதற்கு முன் பிருந்தே இவ்வளவு போட்டி!
‘மக்கள் ஏன் விரும்புகிறார்கள்?’
ஃபேஸ்புக் போன்ற சோஷி யல் நெட்வொர்கிங் தளங்களை மக்கள் ஏன் விரும்புகிறார்கள்? மனித உறவுகள் பலவீனம் அடைந்து வரும் இன்றைய உலகில் மனிதர்கள் தீவுகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்கள். பழைய காலத்தைப்போல குடும்பம் என்பது வலுவான அமைப்பாக இப்போது இல்லை. குடும்ப உறவுகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதனால், தனித்து விடப்பட்ட மனிதர்கள் உறவுகளைத் தேடி அலைகிறார்கள். உறவின் பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல், பயன்களை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிற நவீன மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம்தான் இத்தகைய இணைய தளங்கள். இவற்றில் நீங்கள் உங்களது உணர்வுகளை நினைத்த நேரத்தில், நினைத்த விதமாக வெளிப்படுத்தலாம். புதிய நண்பர்களைத் தேடிக்கொள்ளலாம். அவர்களோடு அரட்டை அடிக்கலாம், ஆவேசப்படலாம். புகைப் படங்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
via - Jahan Jack
தாயார் மல்லிகா மாறனுடன் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன்
படத்தில் இருப்பது சிறுவயதில் தாயார் மல்லிகா மாறனுடன் கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ...
கோடிக்கணக்கான பணத்துக்கு அதிபதிகளாக இருக்கும் இந்த சகோதரர்களுக்கு சொந்தமாக இருக்கும் நிறுவனங்கள் என்னென்ன தெரியுமா ?
வேலூர் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கோவை முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கே.எஸ் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி, ஆர்எம்அர் ரமேஷ்
சேலம் முரசு ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் கேபிள்ஸ் ப்ரைவெட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், கே.சண்முகம்
சன் அகாடமி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் உதயநிதி, கலாநிதி மாறன், எஸ்.செல்வம், கே.சண்முகம்
ஜெமினி டிவி ப்ரைவெட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், ஏ.மனோகர் ப்ரசாத், பி.கிரண், காவேரி கலாநிதி
கல் கம்யூனிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டேட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
கல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (மெட்றாஸ்) ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன், எஸ்.செல்வம் மற்றும் காவேரி கலாநிதி
கேபிகே பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
குங்குமம் நிதியகம் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
உதயா டிவி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
குங்குமம் பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி மற்றும் எஸ்.செல்வம்
நெட்வொர்க் கேபிள் சொல்யூஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் கே.சண்முகம்
சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் எஸ்.செல்வம்
சன் டைரெக்ட் டிவி ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
டிஎம்எஸ் என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிடெட்
இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்
எச்.எஃப்.ஓ என்டர்டெய்ன்மென்ட் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் ப்ரியா தயாநிதி மற்றும் முகம்மது இஷ்ரத்
டிகே என்டர்ப்ரைசஸ் ப்ரைவேட் லிமிட்டெட்
இயக்குநர்கள் கலாநிதி மாறன் மற்றும் ப்ரியா தயாநிதி
சன் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்
ட்ரஸ்டிகள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
எஸ் & எஸ் டெக்ஸ்டைல்ஸ்
செல்வி செல்வம், காவேரி கலாநிதி, ப்ரியா தயாநிதி
எம்எம்எஃப் ட்ரஸ்ட்
ட்ரஸ்டீஸ் கலாநிதி மாறன் மற்றும் மல்லிகா மாறன்
கல் ரேடியோஸ்
இயக்குநர்கள் கலாநிதி மாறன்
சவுத் ஏஷியா எப்.எம்.
இயக்குநர்கள் கலாநிதி மாறன் காவேரி கலாநிதி
இந்தப் பட்டியல் 2006 அன்று உள்ளபடி. இதற்குப் பிறகு மேலும் பல நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார்கள் சகோதரர்கள். கடைசியாக அவர்கள் தொடங்கிய தொழில் நிறுவனம்தான் ஸ்பைஸ் –ஜெட் விமான சேவை...
Thanks - savukku
உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது!
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
ஆம் அது தான் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லட்டுமா?, "விஷ்ணு" கடவுளுக்காக கட்டப்பட்ட இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே "பெரியது "! இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள்! இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட "சூர்யவர்மன்" இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது.
இதன் பின்னர் ஆறாம் "ஜெயவர்மன்" கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக "புத்த" வழிபாடு தளமாக மாற்றப்பட்டு.இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது. பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது, அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.
பின்னர் 1586 ஆம் ஆண்டு " António da Madalena " என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் " is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of." என்று கூறியுள்ளார். பின்னர் Henri Mouhot' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged." என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது.
இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார். ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு "கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் "தேசிய சின்னமாக" பொறிக்கப்பட்டுள்ளது. இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம். ஆனால், இப்போதைய கால சூழ்நிலையில் இதை படிப்பதற்கே சிரமம் என்பதால், இதை இதோடு முடித்துக் கொள்கிறேன்.
கடைசியாக ஒன்று இந்த 2012 வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே?!
-பகலவன்.
நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்?
நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக்கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல்ஆம்ஸ்ட்ராங் என்று.
நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது என்பதால் நானே சொல்லிவிடுகிறேன் அவர், எட்வின் சி ஆல்ட்ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட். அதாவது விமானி.
ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்.
நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.
இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’ தயக்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள்தான் தாமதித்திருப்பார்.
அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.
உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பது மட்டுமல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.
இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...!
via - இன்று ஒரு தகவல்.