அமெரிக்காவில் வாழும் சுவிட்சர்லாந்து நாட்டு விமானிகள் இருவர் சூரிய சக்தியினால் இயங்கும் ஒரு விமானத்தை வடிவமைத்துள்ளனர். 10 வருட கடின உழைப்பிற்குப் பின் இந்த விமானத்தை வடிவமைத்துள்ளதாக ஆண்ட்ரே போர்ச்பெர்க், பெட்ராண்ட் பிக்கார்ட் என்ற அந்த இரு விமானிகளும் தெரிவித்தனர்.
சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியினால் இந்த விமானம் இயக்கப்படுவதால், இதற்கு எரிபொருள் தேவையில்லை. “மே 1-ம் தேதி மாப்போட் பீல்டில் தொடங்கும் இதன் பயணம் தொடங்குகிறது. பல நாடுகளை கடந்து, ஜூலை மாத இறுதியில் இந்த விமானம் நியூயார்க் நகரை அடையும்” என்று அந்த விமானிகள் தெரிவித்தனர்.
இதில் ஒரு விமானி மட்டுமே பயணம் செய்வார். ஆனால் இது பல செய்திகளை சுமந்து செல்கிறது என்றும் அந்த விமானிகள் கூறினர். முற்றிலும் சூரிய சக்தியினால் இயங்கும் முதல் விமானம் இதுவாகும்.