உலகை அதிர வைத்த படம்..!



 1985ம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்த நிலையில், பாகிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகக் குடியேற, அங்கு சென்ற நேஷனல் ஜியோகிராபிக் போட்டோகிராபர் ஸ்டீவ் மெக்கர்ரி இந்தப் பெண்ணின் படத்தைப் பிடித்தார். எதிர்காலம் குறித்த கேள்வியும், அச்சமுமாக இந்தச் சிறுமியின் அவலம் நிறைந்த முகத்தை நேஷனல் ஜியோகிராபிக் இதழ் தனது அட்டைப் படத்தில் வெளியிட, உலகம் ஆடிப்போனது. இதுவரை வெளியான நேஷனல் ஜியோகிராபிக் அட்டைப் படங்களிலேயே மிகச் சிறந்த படமாக இன்று வரை இதுவே முன் நிற்கிறது.